followers 0 popularity
1
following 1

following  view all

Groups
autonews360 is not in any groups
autonews360
இந்தியாவில் கேடிஎம் பைக்களின் விலை உயர்ந்தது
ஆஸ்திரேலிய தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு மாடல்களுக்கான விலையையும் உயர்த்தியுள்ளது.

சமீபத்தில் கேடிஎம் நிறுவனத்தின் 125 டியூக் பைக்களுக்கான விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நிறுவனம் தனது பைக்களுக்கான லேட்டஸ்ட் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அனைத்து பைக்களுக்கான விலையும் அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில், 250 டியூக், ஆர்சி 390 மற்றும் 390 டியூக் பைக்களும் இடம் பெற்றுள்ளது.

இந்த பைக்களின் விலை சிறிய அளவில் அதாவது 2,000 முதல் சில மாடல்களுக்கு 9,000 வரை ஆர்சி 390 பைக் விலை வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அதிக விலை கொண்ட 390 டியூக் பைக்களின் விலை 4,000 ரூபாய் வரை அதிகமாக இருக்கும். முக்கியமாக 2019ம் ஆண்டுக்கான 390 டியூக் பைக்களின் 2018 மாடல்கள் விலையை விட 10,000 ரூபாய் வரையும், 2017 மாடல்களை விட 20,000 ரூபாய் வரை விலையும் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு உற்பத்தி செலவு உயர்வும், வெளிநாட்டு கரன்சி மதிப்பில் ஏற்பட்ட மாற்றமுமே காரணமாக இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு கவாசாக்கி நிறுவனம் விலையை உயர்த்தியதை தொடர்ந்தே இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது.

உயர்த்தப்பட விலை பட்டியல்:

மாடல் விலை (பழைய) விலை(புதிய விலை)
125 டியூக் ஏபிஎஸ் ரூ. 1.18 லட்சம் ரூ. 1.25 லட்சம்
200 டியூக் ஏபிஎஸ் ரூ. 1.60 லட்சம் ரூ. 1.62 லட்சம்
ஆர்சி 200 ஏபிஎஸ் ரூ. 1.88 லட்சம் ரூ. 1.90 லட்சம்
250 டியூக் ஏபிஎஸ் ரூ. 1.93 லட்சம் ரூ. 1.97 லட்சம்
ஆர்சி 390 ஏபிஎஸ் ரூ. 2.35 லட்சம் ரூ. 2.44 லட்சம்
390 டியூக் ஏபிஎஸ் ரூ. 2.44 லட்சம் ரூ. 2.48 லட்சம்
(அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்)

Source: https://www.autonews360.com/bike-news-tamil/ktm-hikes-prices-in-india/
Added 2 days agoadd/view comments (0)
no recent activity

sign in

Username
Password
Remember Me


New to IM faceplate? join free!

Lost Password? click here