followers 0 popularity
0
following 1

following  view all

Groups
digitalnewspaper24x7 is not in any groups
digitalnewspaper24x7

The death sentence for the four accused in the Nirbhaya rape case has been postponed.

Mar 3rd 2020 at 12:06 AM

2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நான்கு நபர் ஒரு பெண்ணை கற்பழித்து கொல்லப்பட்டு வழக்கு இன்றும் தள்ளி வைக்க பட்டது,இதை அடுத்து குற்றவாளிகள் கருணை மனுவை கொடுத்தாலும் அதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் ஏற்று கொள்ளவில்லை,

இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி (இன்று) காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு கடந்த மாதம் 17-ந்தேதி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து பவன் குப்தா தரப்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு கருணை அனுப்பப்பட்டது. அவரது சார்பில் வக்கீல் ஏ.பி.சிங் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி பவன் குப்தா, அக்‌ஷய் குமார் ஆகியோர் சார்பில் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி தர்மேந்தர் ராணா தலைமையிலான அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து நீதிபதி தர்மேந்தர் ராணா குற்றவாளி தரப்பில் ஆஜரான வக்கீலிடம், “நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறினார். பின்னர், குற்றவாளியின் கருணை மனு நிலுவையில் இருப்பதால், தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும், எனவே 4 குற்றவாளிகளையும் 3-ந்தேதி (இன்று) காலை 6 மணிக்கு தூக்கில் போடுவதை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தள்ளிவைத்து உத்தரவிடுவதாகவும் கூறினார்.

எனவே குற்றவாளிகள் இன்று தூக்கிலிடப்படமாட்டார்கள். அவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவது 3-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

0 comments
Please to comment

sign in

Username
Password
Remember Me


New to IM faceplate? join free!

Lost Password? click here